கஜல்
கஜல்
கஜல் ஒரு ஃபார்சீ மொழி கவிதை வடிவம். ஃபார்சீ மொழியிலிருந்து உலகின் பல மொழிகளுக்கு பெயர்ந்து மிக பிரபலமாகி விட்டது. கஜல்.
தமிழில், காலம் சென்ற திரைப் பட பின்னணிப் பாடகர் உயர் திரு.பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் கலஜல்களை எழுதி வழங்கினார் என்பது எனக்குத் தெரியும். அவர் தான் என்னையும் தமிழிலில் கஜல்களை எழுதும்படி செய்தார்.
இதோ எனது கஜல்கள். பிடித்து விட்டு சொல்லுங்கள்.
-------------- உங்களோடு ரோச்சிஷ்மான்
மனதோடு பாட இனிதாக வந்தாய் நீ
மதியோடு வாழ நனவாக நின்றாய் நீ
புதிதாக மாறியது உள்ளமே உன்னால்
விழியோடு தோன்றி ஒளியாகி விட்டாய் நீ
இனமேது மின்றி இதமான எண்ணங்கள்
உதிரத்திலோட வழி ஒன்று செய்தாய் நீ
பொலிவான கால மினிமேல் நிலையாகும்
மொழியோடு பாய, புது பாவ மானாய் நீ
சுகமான வாழ்வு தவறாது கூடாதோ?
உயிரோடு சேர உறவாக உள்ளாய் நீ