ஆறாம் அறிவும் ஞானமும்

அப்பா....எனக்கொரு
ஆசை செய்வீர்களா ?

அதைவிட எனகென்ன
வேலை சொல்லடா?


அடைபடாத பாட்டில் தண்ணீர்....
அருமையான தென்றல் காற்று....
இதமான வெயிலின் இன்பம்....
எங்கும் பசுமை ....
காலத்தில் மழை
கோடையில் வெயில்
மார்கழி குளிர்
இவைதான் வேண்டும்
செய்வீர்களா எனக்கு.....


தலை சுற்றலுடன்
தாங்கிப்பிடித்த கைகளுடன்

ரீமோட்டில் கார்
ரெடிமேடாய் நான் தருவேன்
அடைபட்ட டப்பா உணவு
அப்படியே நான் தருவேன்
காலமெலாம் குளிர்தரும் (A.C )
பெட்டியையும் நான் தருவேன்
கரியுமில வாயுதரும்
காரும்தான் நான் தருவேன்

கடந்து போன
வாழ்வைக் கேட்கிறாயே
என் செய்வேன்......


இனிய வாழ்வை
இய்ற்கையோடினைந்ததை
நீங்கள் அனுபவித்து
விட்டதை தொட்டதை
வினையான வாழ்வதை
எமக்களித்தால் எப்படி?
என் சந்ததிக்கு
என்னபதில் நான்
உரைப்பேன்?
இல்லை
என்பல்லை இளிப்பதா ?

இது இழிசெயல் இல்லையா?

சொகுசான வாழ்வுக்காய்
சொர்க்கத்தை இழப்பதா ?

ஒருதங்க முட்டைகாய்
வாத்தையே கொல்வதா?

இரக்கமற்ற சமுதாயத்தை
இதன்மூலம் படைப்பதா?

விக்கித்த அப்பாவின்
வெறித்த பதிலிது

நீகேட்ட கேள்வியால்
நெஞ்சம் குத்தியதே ...
குத்திய இடத்திலிருந்து
குருதியும் வழியுதே ....

உற்றதைக் கேட்கிறாய் - நான்
பெற்றதைக் கேட்கிறாய்
உணர்வால் நானிருந்த
வாழ்வைக் கேட்கிறாய்

உணவுச் சங்கிலியால்
உருண்ட உலகைக்
கேட்கிறாய்

சங்கிலி அறுந்ததை
சங்கடத்தோடு சொல்கிறேன்
சாபம் நாம்பெற்றதை
சலிப்போடு சொல்கிறேன்

ஆண்டவன் கொடுத்ததில்
அதிகம் நமக்கு கொடுத்ததில்
அழிவின் விளிம்பில்
அண்டம் அதன் வழியில்

மனிதம் அற்று
மதங்கள் கற்று
மரங்கள் விற்று
மரணத்தைப் பெற்று
மாளும் நிலைக்கு - நாம்
வீழும் நிலைக்கு
மானுடம் சென்றது
ஆண்டவன் கொடுத்ததால் தானோ?
அதிகம் நமக்கு கொடுத்ததால் தானோ?

ஆறாம் அறிவில்
ஆக்கம் கொண்டோம்
அழிவைப் பெற்றோம்
ஆழிசூழ் உலகை
அழிக்கக் கற்றோம்

ஆறாம் அறிவில்
ஞானம் பெற்றால்.....


மனிதம் தழைக்கும்
மரங்களும் தழைக்கும்
மரிக்கும் உலகம்
மறுபடிக் கிடைக்கும்

என்மகனே
எனதருமை மகனே
நீ வேண்டும் வரமும்
நீ தேடும் வாழ்வும்
அமைக்கும் முயற்சியில்
அப்பன்நான் செய்திடுவேன்

மரங்கள் எனும் ஞானத்தை
மண்ணுடன் உறவிட்டு
மாந்தர் வாழ்வையும்
மற்றதன் வாழ்வையும்
நீ கேட்ட வாழ்வையும்
நிலைபெற
முயல்வேனடா.......?......!

எழுதியவர் : குரு நிர்மல் ராஜ் (10-Jul-15, 11:48 pm)
பார்வை : 124

மேலே