சமுதாய நிழல்

உன் பாதங்களோடு கைகோர்த்து
நடக்கும் உன் நகலே.! - நிழல்
உன் பாதையே அதன் பாதை.!
நீ சந்தனத்தில் கால் வைத்தால்
அது சந்தன குளியல் இடும்.!
நீ சாக்கடையில் கால் வைத்தால்
அது சாக்கடையில் நீச்சல் இடும்.!
ஆனால் நாற்றமென்னமோ உன்
கால்களுக்கே.! உன் நிழலுக்கல்ல.?
இந்த சமுதாயம் உன் நிழல்..