தேய்பிறை சிநேகிதி
நீ என் தேய்பிறை சிநேகிதி !!
என் தொப்புள்கொடி பிரித்தவளே - தொக்கம் எடுத்து விட்டவளே
அரைஞான்கொடி கட்டியவளே - அரைபொக்கை கிழவி ஆனாயே
அலாரக்கடிகாரம் இருந்தாலும் - சூரியக்கடிகாரம் பாத்து எழுந்தவளே
இப்போ கையத்தடவி நடக்குற - கத்தி பேசச்சொல்லி கேக்குற
என் சுயமுன்னேற்ற உலகம் உருவாக்கி கொடுத்தவளே
உன் உலகம் இன்னும் உறங்கியே கிடக்குதடி!
உனக்கான வாழ்க்கை இன்னும் வாழாமலே இருக்குதடி!
இப்போ உன் வாழ்வும் முடியப்போகுதடி!
நீ என் தேய்பிறை சிநேகிதி !!
இப்படிக்கு,
உன் முதல் உயிரின் முதல் உயிர்