சென்னை என் முதல் பயணம்

பத்தடுக்கு மாடி கட்டிடம் (LIC)
எதிரே பத்தடி கூட இடம் இல்லாத ஏழை

அங்கு அவன் ஏ.சி காத்து வாங்கறான்
இங்கு இவன் தூசியில தூங்கறான்

அங்க பீட்சா அவன் திங்கறான்
இங்க பிச்சைக்காக ஏங்கறான்

அவன் பேப்பரதான் வீசறான்
இவன் அத பெட்டாதான் மாத்துறான்

அவன் காசு பணம் பாக்கறான்
இவன் சில்லரைக்கு கை நீட்டறான்

அவன் ஏரோ பிலேனுல போகறான்
இவன் மேல கீழ பாக்கறான்

அவன் சேதி சேதியா அனுப்புறான்
பாவம் இவன பத்தி சேதி சொல் நாதி இல்லாம இறக்குறான்...

அவன் சென்னையில வாழறான்
இவன் சோறு இல்லாம சாகறான்

சிட்டினு சொல்லுறான் மனுசன் சிட்டா பறக்குறான்

தமிழன் என கூறும் நாம் தலை நிமிரந்து கொண்டு இருப்பதால் தான் தெரியவில்லையோ கால் அடியில் கை ஏந்தும் மக்களை

பாத்த எனக்கு பக்குங்குது

சென்னை என் முதல் பயணம்
அதுவே என் இறுதி பயணம்

எழுதியவர் : தினேஷ்குமார் (10-Jul-15, 11:40 pm)
பார்வை : 68

மேலே