சாதிச் சாக்கடை
அவளுக்காக
ரோஜா
வாங்கச்
சென்றபோது...
ரோஜாப்பூக்கடைக்கு
அடியில்
சாக்கடை
ஓடும்போதுதான்
தெரிந்தது..!
ரோஜாவின்
நிறம்
கறுப்பு
என்று..!
கறுப்பு
ரோஜாக்களின்
கண்ணீர்ப்பூக்கள்
சாதிச்சாக்கடையில்
மறைக்கப்பட்டு
விடுகின்றன...!