கனவுக்காதல்

இமைகள் மூடுகின்றன
இணைந்தன இரு கரங்களும்
அதிசய உலகமது அங்கு
அவளும் நானும் தான்

எங்கள் இருவருடன்
எங்கும் உலாவந்தது
உணர்வுகளால் பூத்த
உண்மைக் காதல் மட்டும்தான்

பயம் தெரியவில்லை அவ்விடத்தில்
பகைமை பாராட்ட யாருமில்லை
பசுமை நிறைந்து கிடந்தன
பறவைகள் கூச்சலில்லை

பலவண்ண மலர்கள் எங்கும்
பரந்து முகமலர்ந்திருந்தன
பழுத்து சிவத்த பழங்கள்
பறித்து புசித்தால் பசிதீரும்

என்னுள் உணரத் தோன்றியது
எழில்மிகு இவ்வுலகின் வம்ச விருத்திக்கு
அவதரித்த ஆதம் ஏவாள்
அவளும் நானுமென்று,............

எழுதியவர் : வேலணையூர் சசிவா (12-Jul-15, 3:09 pm)
பார்வை : 92

மேலே