ஊச கெழவியும்,வேப்ப மரமும்

அது எங்கள் தெருவின் அடையாளம்...


ஊரின் எந்த மூலையில் இருந்தாலும் அதோ அங்க தான் டா இருக்கு எங்க வீடு...


பங்குனி மாச வெயிலா இருந்தாலும்..
அங்கன மட்டும் ஈர துண்ட மேல போட்டது போலவே இருக்கும்....

சாயங்காலம் ஆனா முத்தம்மா கெழவி பணியாரம் சுட்டு விக்கும்...


அப்பா கருப்பட்டி பலகாரம் வாங்க தலமாட்டுல காசு வைக்கும் போதே..

அங்க குயிலு எந்திரிச்சு இருக்கும்.. எங்க வீட்டு கட குருவி (சிட்டு குருவி) அங்க தேன் ஓடி போய்டும் காலைல யே....


உளுந்த வட வாங்கிட்டு போர சின்னபிள்ளைகட்ட புடுங்கி திங்க அங்க இருந்து தேன் வேவு பார்க்கும் அந்த காக்கா.....


அன்னைக்கு நாயித்து கிழம..

காலையிலேயே மட, மடன்னு சத்தம் கேக்க ஒடியாந்து பாத்தேன்..

குயில கானோம்,..
காக்கவும், கடகுருவியும் மிலிட்டரி தாத்தா வீட்டு மெத்துல இருந்துச்சுக...


ஏழே நம்ம தெருவுக்கும் சிமெண்ட் ரோடு போட போராக டா

அதே வேப்ப மரத்த வெட்ராக...


எல்லாரும் கிறுக்குன்னு சொல்லுவாக
ஊச கெழவிய
அது மட்டும் கத்திகிட்டே இருந்துச்சு..


சாமி மரம்டா,, அழிய போரீக...
வெட்டாதீக..


யாரும்மே கேக்கவே இல்ல...


அங்கே உயிர் ஒடியும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது....








____மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் (12-Jul-15, 2:53 pm)
பார்வை : 79

மேலே