இடுப்பின் கீழா இயலாமை

பாலியல் வன்புணர்வுக்கு எங்கள் பாலினம்தான் கிடைத்ததா ?
ஆயிரம் விலங்குகளுண்டு - பறவைகள் உண்டு
இவையும் போதாதா ?
இருக்கவே இருக்கிறது உங்கள் இனம் -ஆணினம் - அதிகார இனம்
பெண் முன்னேற்றத்திற்குத்தான் பயன்படவில்லை
இதற்கேனும் பயன்படட்டும்
வயது வேறுபாடுகூட அறியமுடியாத அறிவிலிகளே -எங்கள்
பாலின பாகுபாடு மட்டும் எப்படி அறிந்தீர்கள் ?
அரைநாள் பசி பொறுக்க முடியாமல் - எங்கள்
உடல் புசித்தாலும் ஏற்போம் - நித்தம்
ஒருவர் உயிர் துறப்போம் - உங்கள்
பசி வயிற்றில் இல்லை - உங்கள்
இடுப்பின் கீழா எங்கள் இயலாமை இருக்க வேண்டும் ?

எழுதியவர் : ரௌத்திர பாரதி (12-Jul-15, 11:28 pm)
பார்வை : 360

மேலே