அட அவ தாங்க

இனிக்க பேசும் தமிழ்....



இலை வடியும் மழை நீர்...

மயில் இறகு போட்ட குட்டி....



அதிகாலை தென்றல்...



மழைக்கால குளிர்....




பூமியில் உதிர்ந்த நிலவு...


தினம் பூக்கும் குறிஞ்சி...


பேசும் ஓவியம்...

மார்கழி மாத காலை...



விண்ணுலக தேவதை...

புல் நுனி பனி....

ஏழு வண்ண வானவில்....


எட்டாவது அதிசயம்...


என்
கவிதை கருவூலம்...

என் நொடிகளின் கடிகாரம்...


பூக்களின் மொத்தம்....


என் தங்கை மகனுக்கு அத்தை....

எனக்கு முதல் வரி...

உயிருக்கு முகவரி...




அட இது அத்தனையும் என்னவளே.....










.....மஞ்சள் நிலா 🌙

எழுதியவர் : நாகராஜன் நாகா ஸ்ரீ (12-Jul-15, 5:36 pm)
Tanglish : ada ava thaanka
பார்வை : 106

மேலே