சாலைகள் எனும் நூலகம்
பல முகங்கள்
பல உணர்வுகள்
பல மொழிகள்
பல காட்சிகள்
எல்லாம் இருந்தும்
வாழ்க்கை அவசரத்தில்
வண்டிகளில் பறக்கும் நாம்
படிக்க மறந்த
கவிதைகளாய், கதைகளாய் ,
இலக்கணமாய், இலக்கியமாய்
காவியங்களாய்
நீண்டு கொண்டே போகிறது
சாலைகளின் நீளம்