புண்ணிய பூமி

இங்கேதான் ..
நாகரிகம் செழித்திருந்தது
வியக்கும் வண்ணம் !
கலைகளும்
வளங்களும்..
ஆசைகளும் ..
அழிவுகளும்..
ஆக்கிரமிப்புகளும் ..
கூட..
எல்லாமே
இங்கேதான் பெருகியிருந்தன
எப்போதும்..
நான்தான்..
இன்னும் இங்கு
இதுவரை
வாழவே இல்லை ..!

எழுதியவர் : கருணா (12-Jul-15, 6:37 pm)
Tanglish : punniya poomi
பார்வை : 90

மேலே