விழிக்கலாம் வாருங்கள்
உங்களது கனவுகளுக்கு
அர்த்தமும் ..
பலனும்..
சொல்கிறேன்..
உங்கள் கனவுகளில்
உங்கள் உள்ளம்
எனக்குத் தெரியும்
என்பதால்..!
இந்த ரகசியம்
உங்களுக்குத் தெரியாது
என்பதால்..!
கலையாத கனவுகள்
ஒன்றிரண்டு
சொல்லுங்களேன்..
உங்கள் கனவுகளை
நான் கலைக்கிறேன்..
விழிக்கலாம் ..
நீங்களும் !