மனங்கவர் காதலி - 11

கொட்டருவிப் பொங்கியெழ
மத்துவிழிக் கார்மணிகள்
இப்புறமும் அப்புறமும்
ஏக்கமொடு சுற்றுதடி!

சிற்றளவும் சத்தமின்றி
எப்படியென் சிற்றறையில் (உள்ளம்)
சித்திரம்நீ தந்தனையோ
செஞ்சுடரே கண்மணி!!

நெற்றியிலுன் ஞாபகத்தை
பொட்டெனநான் சூடிநிதம்
நித்திரையில் நீபுரியும்
நிருத்தமதைக் காண்கிறேன்!

பித்தனெந்தன் கள்மயக்கம்
போக்குவிக்கும் முத்தமொன்றை - என்
உச்சந்தலை மீதமர்ந்து
நீபொழி வா(ய்), கண்மணீ!!


^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (13-Jul-15, 4:30 am)
பார்வை : 99

மேலே