நானும் தோற்றேனடி -காதலியை வர்ணித்து கவிதை

கார் மேகமும் தோற்றதடி
உன் கரு நீள கேசத்திடம்

வானவில்லும் தோற்றதடி
உன் புருவ வில்லிடம்

கயல் விழியும் தோற்றதடி
உன் கரு விழியிடம்

முத்து சிப்பியும் தோற்றதடி
உன் முத்து பல் சிரிப்பிடம்

அன்ன பறவையும் தோற்றதடி
உன் அழகு நடையிடம்

ரோஜா இதழும் தோற்றதடி
உன் அழகு உதட்டிடம்

நானும் தோற்றேனடி
என் அழகு தேவதையிடம்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (13-Jul-15, 4:00 pm)
பார்வை : 277

மேலே