இலக்கியக்கலவையோடி நீ - கற்குவேல் பா
இலக்கியக்கலவையோடி நீ
````````````````````````````````````````
திருக்குறள் ,
உன் இதழ் .. !
குறுந்தொகை ,
உன் இடை .. !
நெடுநல்வாடை ,
உன் நடை .. !
~*
பழமொழி ,
உன் விழி .. !
நற்றினை ,
உன் இமை .. !
நன்னெறி ,
உன் நெற்றி .. !
~*
பதிற்றுப்பத்து ,
உன் பற்கள் .. !
கண்ணன் பாட்டு ,
உன் கண்ணம் .. !
குயில் பாட்டு ,
உன் குரல் .. !
~*
சாகுந்தலம் ,
உன் கூந்தல் .. !
முல்லைப்பாட்டு ,
உன் கூந்தல்வாசம் .. !
மூதுரை ,
உன் இளநரை .. !
~*
வளையாபதி ,
உன் புருவம் .. !
குண்டலகேசி ,
உன் நாசி .. !
முக்கூடல் ,
உன் கழுத்து .. !
~*
கைந்திலை ,
உன் கைகள் .. !
கலித்தொகை ,
உன் கால்கள் .. !
ஐங்குறுநூறு ,
உன் விரல்கள் .. !
~*
சிலப்பதிகாரம் ,
உன் ஆரம் ..!
சீவகசிந்தாமணி ,
உன் கொலுசுமணி .. !
கலிங்கத்துப்பரணி ,
உன் மச்சங்கள் .. !
~*
புறநானூறு ,
உன்னில் பார்த்தவை .. !
அகநானூறு ,
உன்னில் பார்க்காதவை .. !
பிள்ளைத்தமிழ் ,
உன்னில் நமக்கானது .. !!
-- கற்குவேல் . பா