கனவுக் காதலி

கண்களில் கவிதை ஏந்தி
இதழ்களில் புன்னகை ஏந்தி
புருவத்தில் வில் ஏந்தி
நெற்றியில் நிலவு ஏந்தி
கன்னத்தில் தாமரை ஏந்தி
முகத்தில் நாணம் ஏந்தி
கழுத்திலே சங்கு ஏந்தி
இடையிலே கொடி ஏந்தி
பாதத்தில் பஞ்சு ஏந்தி
கொஞ்சல் நடை ஏந்தி
கேசத்தில் பின்னல் ஏந்தி
தேகத்தில் மின்னல் ஏந்தி
மார்பில் மலர் ஏந்தி
கைகளில் மாலை ஏந்தி
நெஞ்சில் என்னை ஏந்தி
வந்தாள் ஒரு வானவில்
வந்துவிட்டாள் என் காதலியென்று
ஓடி சென்று முத்தமிட்டேன்
வாயெல்லாம் இரத்த ஆறு
வந்ததோ ஒரு கனவு
இடித்ததோ மரக்கட்டை
இடிந்ததோ மனக்கோட்டை

எழுதியவர் : Rathnamala Bruce (13-Jul-15, 1:48 pm)
பார்வை : 203

மேலே