திகிலூட்டும் பின்புறங்கள் -ரகு

தொடர்ந்து விழும்
வறட்டிகளுக்கான அடியில்
பின்புறச் செங்கல் சுவர்
பெயர்ந்து கிடந்தது

சிறகொடிந்து
பறக்கும் தட்டான்
அறிந்திருக்கும்
பதுங்கும் பின்புறத்தை

அடர்வன விலங்குகளின்
பின்புறப் பார்வையில்தான்
மிரட்சியின் மிகுதி

பின்புறமென
யூகித்தறைந்த ஆணியில்
ஆவி விட்டதிருக்கட்டும்
மரத்தின் பாடு என்னவோ ?

கிழக்கானது வாசல்
என்பதால் தானோ
சூரியச் சாவு
நித்தம் நிகழ்கிறது
மேற்கெனும் பின்புறத்தில்

விடிகாலைப் பொழுதின்
பிரபல நடைப் பயிற்சி
மொட்டை மாடியில்
அரங்கேறுவதும்
திகிலூட்டும் பின்புறத்தால்
நேர்ந்ததே !

எழுதியவர் : சுஜய் ரகு (13-Jul-15, 9:12 pm)
பார்வை : 75

மேலே