என் வாழ்க்கை
சிலந்தி வலைபின்னல்
என் அழகு தேவதையின்
சிறு கட்டுமானம் வீடு
அக்கூட்டின் சிதறல்கள் வேண்டாம்
மனதால் மறக்கவும்
சொல்லால் அழிக்கவும்
என் மனம் அழுத்தது
பெண்ணே!!!!
அவள் இல்லையெனில்
நானில்லை
அவர் இல்லையெனில்
என் வளர்ச்சி இல்லை
அமைதிக்கு என் அம்மா
அறிவுக்கு என் தந்தை
அம்மாவின் அதட்டல்களுக்கு
கோபபட்டும்
அப்பாவின் அறிவுறைக்கு
இலக்கணம் பேசியும்
சிறுசிறு சந்தோசங்களுடன்
வாழ்ந்த வாழ்க்கை
பெண்ணே!!!!!!!!!!!
உன்னால் நானோ
என் அம்மாவின் ஆசைகளையும்
என் அப்பாவின் ஏக்கங்களையும் மறந்து
காதல் எனும் மழையால்
குழவியின் மண்கூடு கழைந்தது என் மரணத்துக்கு பின்னால்