காதல் வருவது எப்போது
முதன் முறை
பிடிக்கவில்லை என்றாய்!
இரண்டாம் முறை
முன்பே சொல்லிவிட்டேனே என்றாய்!
மூன்றாம் முறை
எதுவும் சொல்லவுமில்லை!
என்னை கொல்லவுமில்லை!
ஆனாலும்,
உன் விழிப்பார்வைகளை..
பார்த்தும் சாகிறேன்!
பார்க்காமலும் சாகிறேன்!
உன் குரல்பேச்சுகளை...
கேட்டும் சாகிறேன்!
கேட்காமலும் சாகிறேன்!
உன் கனவுகளோடு
என் இரவுகள் விடியும்!
உன் நினைவுகளோடு
என் பகல்கள் உறையும்!
உனக்கான காத்திருப்பு
உயிர்கொல்லும்
சுகமாகிப்போனது எனக்கு!
உனக்கான பரிதவிப்பு
மனங்கொல்லும்
இரனமாகிப்போனது எனக்கு!
பித்தாகிக் கிடக்கின்றேன்!
பைத்தியமாய் அலைகின்றேன்!
உணர்வுக்குள் உனை வைத்தேன்!
உயிருக்குள் உனை தைத்தேன்!
வேண்டும் நீயே வேண்டும்!
உன்னோடு மட்டுமே
வாழ்வெனக்கு வேண்டும்!