காடு வளம் காப்போம்

சாது மிரண்டால்
காடு கொள்ளாது,
கரிகாலன் வெகுண்டதால்
காடுதெறித் ததுஅன்று! 1

காட்டை அழித்து
மக்கள் நுழைந்திட
விலங்குகள் வழித்தடம்
அடிக்கடி மாறும்! 2

விலங்குகள் வெளியேறும்;
பலவாகும் நாம்பெறும்
இன்னல்கள் உருவாகும்;
என்றும் துன்பமாம்! 3

யானை மிரண்டால்
ஊரே தாங்காது,
மைசூர் ஊருக்கு
ஐயோ தாங்காது! 4

நாடு வளம்பெற
காடுவளம் காப்போம்;
விலங்குகளைக் காத்துசுற்றுச்
சூழல்மேம் படுத்துவோம்! 5

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-15, 8:14 pm)
பார்வை : 700

மேலே