விடுகதைக் கவிதை

...................................................................................................................................................................................................
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாததை
பறிக்கப் பறிக்க பெரிதாவதில்
போட்டேன்..
ஒரு திங்கள் கழிந்தது.
செவ்வாயும் புதனும் கழிந்தன..
பாதமில்லை; படித்தெழுதும்
காகிதமில்லை..
தாள் வந்தது - சாப்பிடத்தான்...!
....................................................................................................................................................................................
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாதது- வெங்காயம்; பறிக்கப் பறிக்க பெரிதாவது -குழி. ஒரு திங்கள்- ஒரு மாதம்.
பொருள்; வெங்காயத்தைக் குழியில் போட, ஒரு மாதம் இரண்டு நாள் கழித்து வெங்காயத்தாள் வந்தது. அவ்வளவே. தாளுக்கு பாதம், காகிதம் என்ற பொருளும் உண்டு)
............................................................................................................................................................................................