கண்ணீநீர்

பிழைப்புக்காக ஊர்ஊராய் தஞ்சம் அடைந்து..
சொந்த ஊரை பஞ்சம் அடையச் செய்த பரதேசி நான்...!
குளம் குளமாய் கட்டிய என் பாட்டனின் வாரிசாய் இருந்து..
குடத்தண்ணீருக்கு கூட குளமின்றி என் பிள்ளையை அலையவிட்ட பாவி நான்...!
குட்டிக்கரண நீச்சலெல்லாம் குதூகலமாய் அனுபவித்துவிட்டு...
குழாயடி நீரைக்கூட என் சந்ததிக்கு தர இயலாத பேழை நான்...!

எழுதியவர் : அருண் வேந்தன் (14-Jul-15, 5:39 pm)
பார்வை : 100

மேலே