தடாகத் தாமரை - 1
எம்பியெழும் தங்கநுணல் தங்குதற்குச் செங்கமலம்
தண்டிடுக்கில் தாள்விரித்து நின்றிருக்கும் - நின்றவிளம்
செங்கமலம் தங்குகின்ற தங்கநுணல் காண்பதற்கு
தண்டிலொளிர் செங்கதிரோன் காண் .
(துள்ளும் பொன்நிறத் தவளை தங்குவதற்கு செந்தாமரை,
தன் தண்டுகளின் அருகில் தன் இலைகளை பாய்போல் விரித்துவைத்து நின்றிருக்கும்.
நிற்கின்ற அச்செந்தாமரை,
இலையில் அமர்ந்து காணும் தவளைக்கு, தண்டில் ஒளிர்கின்ற சூரியன் போல் திகழும்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்புடன்
சுந்தரேசன் புருஷோத்தமன்