சாப்பாட்டு பிரியை
![](https://eluthu.com/images/loading.gif)
தலைவெடிக்கும் போல இருக்கு
என்று நான் கத்தும் போது எல்லாம்
அம்மா தரும் மருந்து டீ??
பசியோடு இருக்கையில் சித்தி
வெடிக்க விடும்
கடுகின் சத்தம்தான் சங்கீதம் ??
புதினா சட்னி புத்துணர்வு
அளிக்குமா தெரியாது
அடிவயிற்றையே புரட்டி போடும்??
குழந்தை கோவமா இருக்கா
அவளுக்கு பிடிச்சத செஞ்சிகுடு
எனும் அப்பாவின் சொல்லுக்காகவே
பொய்யாக கோவித்துக்கொள்கிறேன்
அப்பாவிடம் ??
பாட்டியோடு சாப்பிட
அமர்ந்தாலே அவள் பாதி முட்டை
எனக்குத்தான்
பாசம் மொத்தம் எனக்குத்தான் ??
எலியும் பூனையுமாய்
சண்டையிடும் அண்ணன்
பாசத்தோடு பழரசம் வாங்கித்தருவது
அவன் கிரிக்கெட் மட்டையை
தேடிவைக்கத்தான்??
உப்புத் தோய்த்த
புளியங்காய் வரவைத்த
எச்சிலை ...
எந்த நட்சித்திர
உணவகங்களும் வரவைக்கவில்லை ???
(எனக்கு சாப்பிட ரொம்ப பிடிக்கும்
சமைக்கவும்தான்)