சருகியல் சிந்தனைகள்

உங்களுக்குத் தெரியுமா..
சருகுக்குக் கால் உண்டு ?!

சிலநேரம் நிற்கும்,
சிலநேரம் நடக்கும்,
ஓடும், பறக்கும்- ஆம்
சருகுக்குச் சிறகும் முளைக்கும்-
காற்று நினைத்தால்..!

கால்களைத் தொட்டு
அது கதைகள் பேசும் !

மிதக்கும் எறும்புக்கது
படகான கதையும் உண்டு...

கவிஞன் பேனாவில்
அது கவிதை ;
ஓவியனுக்கு அது
ஓர் காற்றோவியம்;
மரத்துக்கது பயனற்ற
காய்ந்த இலை;
துப்புரவாளனுக் கது
வெறும் குப்பை;
மண்ணுக்கது மறு
சுழற்சி உரம் ..!

சிரிக்கும் கண்களுக்கது
குதூகலிப்பு -சோகம்
சிந்தும் விழிக்கோ அது
அலைகலிப்பு -இயல்பில்
சிறியதொரு இடப்பெயர்ச்சி..!

இப்போதும் வீசும் காற்றில்
ஒரு சருகு உங்களைக்
கவனிக்கிறது..!

நீங்கள் கவனித்தீர்களா ? !

எழுதியவர் : நிலாநேசி (15-Jul-15, 11:11 am)
பார்வை : 65

மேலே