அலுவலக சிரிப்புகள்

............................................................................................................................................................................................
1
ஆங்கிலப் பெயர்களை விட ஒருத்தரோட குணத்துக்கும் பதவிக்கும் தமிழ்ப்பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கு..!

எப்படி சொல்றீங்க?

நம்ம பிளானிங் ஆபிசர் (planning) பெருமாள் எப்படி?

ஐயையோ, திட்டிகிட்டே இருப்பாரே?

அவர் பதவிய தமிழ்ல சொல்லுங்க..?

திட்ட அலுவலர்..

அதான்..!

..........................................................................................................................................

2

அந்த எழுத்தர் ரொம்ப பொறுமையா கோப்பு பார்ப்பார்னு எப்படி சொல்றீங்க?

அவருக்கும் கோப்புக்கும் இடையில சிலந்தி கூடு கட்டிடுச்சு பாருங்க..!

...........................................................................................................................................................
3

அந்த பியூன் ரொம்ப சுறுசுறுப்பு..!

எப்படி?

ஒரு ஃபைலை இந்த டேபிள்லேர்ந்து பக்கத்துல இருக்கிற அந்த டேபிளுக்கு கொண்டு போய் வைக்க ஒரு வாரம்தான் எடுத்துக்குவார்..!

.............................................................................................................................................................
4

தலைமை கணக்கர்: என்னத்தை லெட்டர் எழுதியிருக்காங்க..? ரெண்டு வரிக்கு ஒரு தப்பு..!

பியூன் : சார், அது நம்ம மானேஜரோட மகளோட லெட்டர்..!

தலைமை கணக்கர்: அதானே..! என்ன ஒரு நேர்த்தி..! என்ன ஒரு அர்த்தம்..!
................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (15-Jul-15, 12:16 pm)
பார்வை : 282

மேலே