மெட்டு ஓன்று மறைந்தது

இசை உலகில் ஒரு சகாப்தம்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

கருப்பு வெள்ளை சினிமா காலம்
மெட்டு போட்டு தொடங்கிய ஜாலம்

பதிமூன்று வயதில் இசை பயணம்
எண்பதை தாண்டியும் பம்பரமாய்

இசை பயணத்தில் 500 ரை தாண்டி
பாடிய பாடல்கள் சிம்மக் குரலில்

இவர் பாடலுக்கு தந்த பெருமை
இக்கரைக்கு ஒரு அக்கறை பச்சை

அந்த வைர வரிகளுக்கு இன்னும்
குரல் தந்தது இவரின் கம்பீர வலிமை

இவர் ஆர்மோனியத்தில் தான்
ஏத்தனை ராகங்கள் உதயமானது

ஆன்மீகம் பால் கொண்ட அதிக ஈர்ப்பு
அழகிய முகத்தில் ஒரு புண் சிரிப்பு

மெல்லிசை தருவதில் மன்னனாய்
சினிமா பொறக்காலங்களில் இசையாய்

தன் திறமைக்கு மணிமகுடமாய் நடிப்பு
பல பரிமானங்களில் இவரின் சிறப்பு

விரல்கள் மீட்டியது முதல் படம் “பணம்”
இறுதியாக இசைத்தது அந்த “சுவடுகள்”

மறையாத உங்கள் பாடல்களும் – என்றும்
மாறாத உன் இசையின் தாலாட்டும்

அந்த கருப்பு வெள்ளை காலங்களில்
முத்திரை பதித்த முழுமையான ராகம்

இழப்பு இந்த திரை உலகுக்கு மட்டும் அல்ல
நீ சுதி சேர்த்த அந்த ராகம் தாளங்களுக்கும்

இசை உலகில் மன்னனாய் வாழ்ந்து
உன் சகாப்தம் என்றுமே சரித்திரமாய் ........

கவிஞர்.இறைநேசன்

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (15-Jul-15, 6:06 pm)
பார்வை : 50

மேலே