அச்சிறா மென் பொருள்
ஓட்டைச் சகடமும் அச்சிறாது அச்சுமை
காதலின் மென்பொருளா னால்
--இது குறட்பா . யாப்பு அறியாதவனும் சொல்லிவிடுவான் . அந்த அளவிற்கு
வள்ளுவர் தன ஒப்பற்ற குறளினால் எல்லோரையும் பாதித்திருக்கிறார் ,
ஓட்டைச் சகட த்திற்கு கவிநண்பர் சுசீந்திரனுக்கு நன்றி சொல்ல கடமைப்
பட்டிருக்கிறேன் . என்னவோ இந்த ஓட்டை சகடம் எனக்கு ரொம்ப பிடித்துப்
போய்விட்டது.
அப்பண்டம் மயில் பீலி ஆயினும் சால மிகுத்துப் பெயின் அச்சிறும் சாகாடம்
என்று சொல்லுவார் வள்ளுவர் ஒரு குறளில்.
இன்னொரு குறளில் மலரினும் மெல்லிது காமம் என்று சொல்லுவார்
அவரது முந்திய குறளுக்கு மாறாகவும் பிந்திய குறளுக்கு சார்பாகவும்
எனது குறட் பாவை அமைத்திருக்கிறேன்
சகடம் ---சாகாடம் ---வண்டி என்று பொருள் படும் வடமொழி சகடிகம்
என்ற சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தது .
புதுக் கவிதையில் :
இந்த இதயம்
ஓட்டைச் சகடம்
ஆனாலும்
ஒடிந்து விடாது
ஏந்தி நடப்பது
உன் காதலின் மென் சுமை
என்பதால் ...
-----கவின் சாரலன்