அச்சத்தை உணர்த்துகிறது
என் தோழியே ....
என்னவனை பிரிந்து ...
வாடிய துன்பம் கொடுமை...
அத்தனையும் மறைந்தது ....
என்னவன் என்னை கட்டி ...
தழுவிய நொடி ....!!!
என் மனது ஏதோ....
தவிக்கிறது மீண்டும் ...
என்னவன் பிரிந்தால் ...
என் நிலை எதுவாகுமோ ....
அச்சத்தை உணர்த்துகிறது ....!!!
+
குறள் 1276
+
குறிப்பறிவுறுத்தல்
+
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 196