தாய்க்கு தன் குழந்தை

கவிஞனின் கற்பனைக்குள் சிக்காத வார்த்தை நீ..........
ஓவியனின் தூரிகையும் அறிந்திடாத வர்ணம் நீ...........
பிரம்மனின் படைப்பினில் பிழைதிருத்தி பிறந்தவன் நீ.............
சிற்பியின் உளிகள் கூட தீண்டாது பிறந்த சிற்பம் நீ..............
இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தால்............ என் கற்பனை முழுதும் கொட்டி தீர்த்துவிட செய்யும்
கலைஞன் நீ ...........
எப்போதும் மெய்மறந்து உனைத்
தொடரும் உன் ரசிகை நான்........
_ அம்மா

எழுதியவர் : (15-Jul-15, 11:02 pm)
சேர்த்தது : prabhakarthik
பார்வை : 69

மேலே