ஐபோன் சாதனை

ஐபோன் 6 ஸ்மார்ட்போனை 100,000 அடி (30,480 மீட்டர்கள்) உயரத்தில் விண்வெளி விளிம்பில் இருந்து பூமியில் விழச்செய்து சோதனை மேற்கொண்டனர். ஐபோன் சாதனத்தில் வெதர் பலூன் இணைத்து அடுக்கு மண்டலத்திற்கு உயர்ந்து கொண்டு சென்று கீழே விழச்செய்தனர். ஐபோனை ரிக் சுமந்து சென்ற பின்பு மீண்டும் பூமியில் விழச்செய்கிறது, அது பூமியில் விழுந்து நொறுங்காமல் இருக்க ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் ஸ்மார்ட்போனின் திரையில் எவ்வித பாதுகாப்பும் செய்யவில்லை. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இராணுவ பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் முன் புற திரையில் எவ்வித பாதுகாப்பும் பொருத்தப்படவில்லை. கலிபோர்னியாவை சார்ந்த அர்பன் ஆர்மர் கியர், இந்த பாதுகாப்பு பெட்டியை உருவாக்கி, ஸ்மார்ட்போனில் பொருத்தி விண்வெளிக்கு அனுப்பி சோதனை மேற்கொண்டனர். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

நிறுவனம் ஸ்மார்ட்போனை ரிக்கில் இணைத்து, அதனுடன் இரண்டு GoPro கேமராக்கள், ஒரு ஜிபிஎஸ் லோகேட்டர், வெதர் பலூன் ஆகியவை கொண்டு ஐபோனை பொருத்தி 100,000 அடி உயரத்திற்கு விண்வெளிக்கு அனுப்பியது. இந்த ஸ்மார்ட்போன் 101,000 அடி உயரத்தில் விண்வெளியில் பாய்ந்ததும் ரிக்கில் இருந்து பலூன் பிரிக்கப்பட்டு மீண்டும் பூமியில் விழுந்தது. இந்த சோதனையின் முடிவில் ஸ்மார்ட்போனில் ஒரு சிறிய கீரல் கூட விழாமல் வெற்றி பெற்றது.

## நன்றி தினகரன்

எழுதியவர் : சேர்த்தது (16-Jul-15, 3:39 pm)
சேர்த்தது : தமிழ்வாசன்
பார்வை : 240

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே