காதலியை வர்ணிக்கும் காதலன்
காதலியை வர்ணிக்கும் காதலன்
நான் என்று உன்னைப் பார்த்தேனோ
அன்றே என்னை எனக்கு அடையாளம்
தெரியாமல் போயிற்று!!!
என்னுள் நீ வந்தாய்...
என் வாழ்க்கை வசந்தமானது!
வெற்றுத் தாள்களில் கூட
உன் வெண்முகம் தெரிகிறது!
கிறுக்கலாய் இருந்த எழுத்துக்கள் கூட
கவிதையாய் மாறியது...
உன்னைப் பார்த்தவுடன்!
பாசத்தை பொழிந்தாள் அன்னையாய்!
தவறுகளை கண்டித்தாள் தோழியாய்!
என்றுமே என் உள்ளத்தில்
இருந்தாள் என் அன்பு காதலியாய்!!!!