மதங்கள் மாறலாம்

சுவாசத்திற்கு தெரியும்
நாற்றம் எது
வாசம் எது என்று ..........

நாவிற்கு தெரியும்
சுவை எது
பகை எது என்று ...........

காதிற்கு தெரியும்
கேட்க கூடியதும்
கேட்க கூடாததும் ...........

பாதங்கள் அறியும்
முள் எது
மலர் எது என்று ..........

இத்தனை இருந்தும்
மனம் மட்டும் ஏன்
அடம் பிடிக்கிறது .............

மார்கங்கள் பலவிருந்தும்
அவரவர்க்கு அதுவே புனிதம் ............

தன்னிலை சார்ந்ததை சற்று உயர்த்தியும்
சாராத மத கொள்கைகளை
சற்று தாழ்த்தி கொக்கறிப்பதில்தான்
கொள்கைகள் கொலைக்களம் போகின்றன ..........

எல்லாம் அறிந்தவர்
இல்லார் உலகில்
ஏற்க ஆளுண்டா ..........

அவரவர் வழியில்
அவரவர் பயணம்
ஏன் இதில் கருத்து குறுக்கீடுகள்
கால சீர்கேடுகள் ..........

விதைப்பது கனிசெடி என்றால்
கரு வேலமரம் முளைக்குமா ..........

காலம் காட்டும் அனுபவங்களில்
காயங்கள் பட்ட பின்பும்
மத மாற்றங்களில் பின்வாங்கி
மதங்கள் மாறலாம் ,
மனங்கள் மாறலாம் ............


கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (17-Jul-15, 9:31 am)
பார்வை : 44

மேலே