மீண்டும் ரோபோக்களுக்கு வேலை
இதயமே இல்லாத
இயந்திர உலகத்தில்
எதற்கு மனிதனிடம்
மனிதாபிமான எதிர்பார்ப்பு ?
மனிதர்கள் எல்லாம்
மனிதர்களாய் வாழ மறுக்கும் காலத்தில் -
ஏற்கப்பட தயங்கும்
வலுக்கட்டாய மனித தர்மம் ...........
போதனைகளை பொய்யாக்கி
சுயநலங்களை நீதி என்று நம்பும்
சூழ்ச்சிகார உலகத்தில்
ரோபோக்களுக்கு மீண்டும் வேலை .......
ஆம் ,
கடமையும் கருணையும்
இயந்திரத்திற்குள் கள்ளடளைகளாய் பிறப்பித்துவிட்டால்
இயந்திரம் கூட
இதயமுள்ளதாகிவிடும் ..............
இரக்கத்தில் கருணையில்
நியாயத்தில் தர்மத்தில்
என எல்ல நல்ல செயல்களிலும்
மனிதனை மிஞ்சிவிடும் விரைவிலேயே ..........
மனிதன் நேசிக்கும்
மாறுபட்ட நீதிகளை
மறுக்கும் சக்தி ..................
நியாயங்கள் தோற்காது
தர்மங்கள் வீழாது
மனிதனால் இயலாததை
இயந்திரங்கள் நிகழ்த்துவதும் சாத்தியமே , சத்தியமே ..............
அதனால் ,
ரோபோக்களுக்கு மீண்டும் வேலை ...........
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்