புதியது

அவனுக்கு..
அது ..
பழகிப் போன ஒன்றுதான்..
ஊர் எல்லையில் இருக்கும்
அரச மரமும்..
அதன் நிழலும்..
குளிர்ந்த காற்றும்..
ஒற்றைக் காகத்தின் கரைதலும்..
அந்த இரண்டு அணில்களும் ..
அங்கே போட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலும்..
பெரும்பாலான மதியங்களில்
அதில் படுத்து கிடப்பதும்..
அரச மரத்தின் கீழ் ..
பிள்ளையார் சிலையும்..
எப்போதோ ஒரு முறை
எரியும் கற்பூரமும்..
எல்லாம்..
எல்லாமே அவனுக்கு
பழகிப் போனவைதான்..
ஆனால் ..
அவனுக்கு வேலை கிடைத்திருக்கும்
செய்தி தாங்கி வந்த
தபால்காரர்
அவன் கன்னத்தை தட்டி..
"நல்லா இரு..லே "
என்று சொன்னது
புதியது..
"வெட்டிப் பயலே "
என்றுதானே எப்போதும்
சொல்லுவார்..
அனுதாபத்தோடு?

எழுதியவர் : கருணா (17-Jul-15, 10:30 am)
Tanglish : puthiyathu
பார்வை : 525

மேலே