குப்பத்தானின் சிவநேசம்

இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?
தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....
குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........
மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan srinivasan