அவள் கற்பனைதான்

அவள்
பச்சைப் புல்லாங்குழல்
என் சுவாத்தை
இசையாக்குகிறாள்
கணிக்க முடியாத
நாள்காட்டியவள்
திகதி இல்லா
நாள் - காட்டியவள்
மழைக் காலத்தில்
எட்டீப்பார்க்கும்
குட்டிப் பூ அவள்
குளிர் காலத்தில்
தளிர்விடும் காற்றின்
வாசம் அவள்
வெய்யில் காலத்தில்
கையில் தவழும்
தண்ணீர்க் குவளை அவள்
கண்களுக்கு வெளியே
காட்சி விரிக்கும்
கற்பனை தாண்டிய தேவதை
அவள் !