எனக்காக ஒருத்தி தண்டவாளத்தில் 555

என்னவளே...

நீதான் என் உலகம் என்று
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...

உன்னை பார்த்துவிட்டால்
என் இமைகளும் பாறைகள் தூக்குமடி...

இன்றைக்கோ நாளைக்கோ
என்னை ஏற்றுகொல்வாய்
என்று காத்திருக்கிறேன்...

காத்திருப்புகளில் இடுக்குகளில்
நசுங்கிப்போன என் உணர்வு...

ஓட்டை பானைக்குள் சேமித்த
நீரைப்போல ஒழுகிவிட்டதடி...

என் மரணமாவது உன்னை
தட்டி பார்க்கும் என்றால்...

எனக்குமுன்னே ஒருத்தி
எனக்காக தண்டவாளத்தில்...

திரும்பினேன் நான்
அவளுக்காக...

இனி நான் செலவிடும்
ஒவ்வொரு வினாடியும்...

அவளுக்காக மட்டுமே
என் வாழ்நாளெல்லாம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jul-15, 3:32 pm)
பார்வை : 990

மேலே