மெளனமான பயண நேரங்களில்-சந்தோஷ்

*** பயண நேரங்களில் பொழுதுப்போக எழுதிய வரிகள்.


வெண்ணிலா சிந்திய
வெளிச்சத்தூறலில்
அந்த வங்காள விரிகுடா
கடற்கரைச் சாலையில்
காதல் நினைவுகளைக்
கிளறித் தூண்டி,
தூண்டி உருகி
தனிமை மணலில்
நான் நடந்தப்போது
உன் பழைய பரிசங்கள்தான்
அலை அலையாய்
என் பாதங்களை
முத்தமிட்டு முத்தமிட்டு
இருதயத்தில்
ஆறுதலாய் தடவியது.
தெரியுமா?
என் காதலியே
வெளி வரா
என் கெளரவக் கண்ணீரை
உன்னாலன்றி
வேறு எந்த எவளின்
விரல்கள் நீண்டு
துடைத்திட முடியும்..?
சொல்............!

------------------------------------------------------------------------காதலும் கவிதையும் சாராயமும்
சத்தான ஒரு போதைதான்
தெளிந்தப்பின்பு சிந்தித்தால்
மொத்தமும் வெற்றிடம்தான். !
---
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-Jul-15, 7:54 pm)
பார்வை : 58

மேலே