நீலமலர் கவிதை
*
தாவணிப் பறந்தாட
துள்ளித் துள்ளிப் போறா…
தட்டாம்பூச்சிங்க அவ கூட
சிறகடித்துப் பறக்குது.
*
இலந்தம் பூவைப் போலவே
இளமை ரொம்ப அழகு
மயில்வண்ணத் தோகைப்போல
கட்டிய தாவணி யழகு.
*
ஆலமரம் விழுதுகள் போல
கருங்கூந்தல் நீளம்
ஆளானப் பொண்ணு
அவ பேருங் கூட நீலம்.
*
தண்ணிக் குடம் தூக்கிப் போனா
தளும்பவில்லை மனசு
கண்பார்வை வீசிப் போனா
காதல் விழிச்சுடரோ புதுசு.
*
செல்போனில் பேசிப் போனா
உதடு சிவந்து தெரியுது
பேசும் வார்த்தை என்னவென்று
காத்துக்கு மட்டும் தெரியுது.
*
காத்து வந்துச் சொன்னா
கட்டிக்க எனக்கு சம்மதம்
நீலமலர் அழகில் சொக்கி
நீண்ட காலம் வாழ்ந்திடுவேன்…!!
*