சொல்லாத நேசம்-ஆனந்தி
ஓங்கி அடித்த மழையில்
ஒதுங்கிய குப்பையா
தெளிந்த நீரோடையா
இதில் எது நான் ....
உணர்வற்ற நிலையில்
உரசிய காற்றாய்
என்னுள் தீண்டியது
என் நினைவுகள் கலைக்கவா
என் நினைவுகளை மொத்தமாய்
இழக்கவா .....
என் எண்ணங்கள் எல்லாம்
உன்னை சுற்றியே பயணிக்கிறது
பயண சீட்டு இல்லாமலே
உன் நினைவுகள் கூட
என்னுள் நிலைக்கவில்லை
அதற்கும் அலட்சியம் போலும்
எனை கண்டு....
வேதனையோடு முடிந்த
நாட்களெல்லாம் சொல்லியது
துன்ப நாள் ஒன்று
முடிந்தது என்று....
சொல்லாத என் நேசம்
செல்லரித்த மரமாய் இன்று
நானும் கூட காகித பொம்மையாய்
திராணியற்று...
காலங்கள் காயங்களை
வேண்டுமானால் ஆற்றலாம்
காதலை அல்ல .....