என்னவள்

ஏக்கம் விதைத்து
தூக்கம் கெடுத்தவள் ...
காதல் உலகில் தள்ளி
கனவில் மிதக்க வைத்தவள்...

பிறவியின் அர்த்தம்
உணர வைத்தவள்...
தனிமையில் தள்ளி
சிரிக்க வைத்தவள்...

வாழ்க்கை பயணத்தில்
வசந்த காலம் சமைத்தவள்...
மலரும் புன்னகையால் என்
கவலை திருடியவள்...

அவளின் கொஞ்சும் பேச்சை
கெஞ்ச வைத்தவள்...
கடைகண் பார்வையால்
உள்ளம் உறைய வைத்தவள்...

கொட்டும் மழையில்
நனைய வைத்தவள்...
கோபம் என்னில்
தனிய வைத்தவள்...

விட்டுவிட மாட்டேன் அவளை!....

கவிதைகள் கோர்த்த எந்தன்
பேனா கொண்டு
அவளை அப்படியே
சிலை வடிப்பேன்....

அதை தேவதைகளிடம்
கொடுத்து என்னவளை
சிறை பிடிப்பேன்...

மலர்கள் தொடுத்து
கட்டி வைப்பேன்...
உலகம் கடத்தி
நிலவில் ஒளித்து வைப்பேன்...

அவளின் இதயத்தில் என்
காதல் முளைக்க செய்வேன்...
காதல் பிறக்காவிடில்
என் இதயம் பரிசளிப்பேன்...

என்னவளுக்காக !.........

எழுதியவர் : சரவணன் (21-Jul-15, 7:57 pm)
சேர்த்தது : இந்திரா சரவணன்
Tanglish : ennaval
பார்வை : 221

மேலே