வலிகளை தருபவனல்ல இவன்

ஓராயிரம் சிலுவைகளை
சுமக்க தயாராகினும்
உன் பாரம் இறக்க
வழி தெரியா நான்
என் வலி
புரியாமல் நீ!
வலிகளை தருபவனல்ல இவன்
வழிகளை !
என் கவி அருவியின் ஊற்று நீ !
சிரிக்க வைத்தும்
கவிதை தருவாய்..
சில நேரங்களில்
அழ வைத்தும்!
ஹிட்லர்களின்
வதை முகாம்கள்
இன்னும் மூடப்படவில்லை போலும்
நீ பேசாமல் நான் படும்
சித்திரவதை !