மீண்டும் கடவுள்

மீண்டும் கடவுள்!

கதவு தட்டும் ஓசை கேட்டு
திறந்ததும் அதிர்ந்தேன்!
தலை குனிந்து
நின்றிருந்தார் கடவுள்!

உள்ளே வந்து
வெறுமையாய் உக்காந்திருந்தார்..

பாஸு! டீ குடிக்கலாமா என்றேன்..
ம்ம்ம்ம் என்றவர்
தம்மடிப்பியா என்றார் !
இல்லை என்றேன்!
தண்ணி ..கிண்ணி
ம்ஹும்ம்ம்...
மங்கை
ஐயய்யோ என்றேன்!

இந்த காதலை மட்டும் விட்டு விடேன்
நீ கடவுளாக மாறிடலாம்
என்னைப் போல என்றார்!

கடவுளாக மாறி நான் என்ன செய்ய..
டீ ஆறுது பாஸு என்றேன்!
என்னிடமே மிஞ்சுகிறாய்
அவளிடம் ஏனடா
கெஞ்சுகிறாய் என்றார் !

பாஸு ..நீங்க ஜஸ்ட் கடவுள்!
அவ தேவதை என்றேன்!
இது நிறைவேறாதுடா
எழுதிய எனக்கு தெரியாதா என்றார் !

கடவுளை கொன்ற பாவத்துக்கு
என்னை ஆளாக்காதீர் என்றேன்
வெதும்பி அழுதார்... நானும் கூடவே!
ஆறீ போனது டீ !

எழுதியவர் : அர்ஜுன் (22-Jul-15, 10:01 am)
Tanglish : meendum kadavul
பார்வை : 343

மேலே