தீயை தீ சுடுவதில்லை

தீயை தீ சுடுவதில்லை!
-----------------------------------------------

படைத்தவன் படைக்காத ஒன்று
இன்று கற்றவர் சிலரின் தொழிலுக்கும்
கருப்பொருளாய் ஆனது.

அவனால் அது
படைக்கப்பட்டிருந்தால்
கருப் பையிலேயே
முத்திரையைப் பதித்திருப்பானே.

கற்காலம் நோக்கி
நாம் பின்னேறிப் போக
வன்முறை வன்கொடுமை
பேய்கள் எல்லாம்
பரபரப்பாய்ச் செய்திகளில்
அரங்கேற்றம் நடத்தும்!

மொழியை, பண்பாட்டைச்
சீரழிக்கும் நமக்கு
பொருளியம் போற்றுதலே
குறிக்கோளாய்ப் போக
அறிவியலும் துணையாகும்
பகுத்தறிவைச் சிதைக்க..

படைத்தவன் தண்டிப்பான்
இயற்கை விதிகளை மீறும்
அறிவிலிகளை மட்டும்

நாம் நடத்தும் செயல்கள்
குற்றங்கள் எல்லாம்
செயற்கை என்பதால் தானோ
நின்று கொல்லும் தெய்வமும்
நீதி தேவதையைப் போல
கண்மூடி சயனத்தில்* சஞ்சரிப்பதாலே


தீயை தீ சுடுவதில்லை
தீயவர்க்குக் கேடு வருவதில்லை.

--------------------------------------------
*சயனம் –= உறங்குதல்

எழுதியவர் : malar (22-Jul-15, 3:10 pm)
பார்வை : 106

மேலே