கல்வி கூடமா இல்லை கல்வி சந்தையா
கட்டம் வரையும் இடத்தினிலே
சிறியதாய் ஒரு கட்டிடம் கட்டி
பள்ளி என்று பெயர் பலகை வைத்து
நம்மை வரவேற்கும் கூட்டம் ஒன்று
போக ஆசை கொண்ட மனமும்
தன்னிச்சையின்றி உள்ளே செல்லும்
வெளியே வைத்த பலகை வரவேற்பாம்
உள்ளிருக்கும் ஒரு பலகை கட்டண அறிவிப்பாம்
மாதா மாதம் கட்டணம் ஒன்று
அதை விடுத்து நிற்கும் பலவும் அங்கு
நம் பிள்ளையை நாமே பள்ளிக்கு அழைத்து செல்ல வேண்டாம்,
பள்ளி வாகனம் வரும் ஒரு கட்டணத்தோடு
3 வயது பிள்ளைக்கும் நீச்சல் பழக்க படும்
அதற்கு தனியாய் கட்டணம் கொடுத்தால் போதும்
பேச தொடங்கிய வயதில் நம் குழந்தை
அதை பாட வைத்திட கட்டணம் ஒன்று
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லை
கட்டணம் அனைவர்க்கும் ஒன்றே
கூட்டல் குறைவு இல்லை...
கட்டணம் ஒரு மாதம் கட்ட தவறினால்
நம் குழந்தை வெளியில் நிற்கும்
அதில் மாற்றம் ஏதும் இல்லை
கல்வி என்னும் அழியா சொத்தை
நம் பிள்ளைக்கு கொஞ்சம் தந்திடவே
கட்டணம் வாங்குகிறார்
வேறெதற்கும் இல்லை....!!!
இத்தனையும் பார்த்தபின்
இது கல்வி கூடம் அன்று
கல்வி சந்தை தான்
சந்தேகம் ஏதும் இல்லை...!!!

