கௌசல்யா -பாகம் 6

நர்ஸ் வந்து அழைத்த பிறகு .......

கௌசல்யா : நான் ஓடி சென்றேன் . கணவரின் கண்களில் கண்ணீர் ததும்பியது
என்னை பார்த்து மிகவும் கவலை பட்டார்.

என்னால் உன் வாழ்கை இப்படி ஆகி விட்டதே ......!என்று மிகவும் மனவேதனையில்
சொன்னார் ....
என் வாழ்வின் அர்த்தமே நீங்கள்தான் நீங்கள் மட்டும் எனக்கு போதும் வேறு எந்த
ஆடம்பர வசதிக்காகவும் நான் ஆசை படவில்லை .........நாளை வீட்டிற்கு செல்லலாம் என்று
டாக்டர் சொன்னார் ...வீட்டில் இருந்து நன்கு ஓய்வு எடுங்கள் .....மற்றவற்றை பிறகு பார்க்கலாம் ..

என்னுடைய பெற்றோரோ ..!என்னை ..கௌசல்யா நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று
நினைக்கிறேன் .எங்களை மன்னித்துவிடு என்றனர் .
நீங்க என்ன தவறு செய்தீர்கள் ....அப்பா நீங்க எனக்கு நல்லதுதா செய்தீங்க ....ஒரு தகப்பன்
ஸ்தானத்துல இருந்து என்ன நல்லதா பார்த்துகிட்டிங்க ...நான்தா நீரைய தவறு செய்திருக்கேன் ...
நீங்கதான் என்ன மன்னிக்கணும் .....தப்பு சென்ச நானே கவலை படல நீங்கயே கண்கலங்குறீங்க ...
அழாதீங்கப்பா ......!என்ன மன்னிச்சிடுங்க ......

மறுநாள் நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்தோம் ..மாதங்கள் கழிந்தது ....வீட்டில் பொருளாதாரம்
பெரும் பிரச்சினை ஆனது ..மகன் படிப்பு செலவு ,வீட்டு செலவு என்று கஷ்டம் எங்களை சூழ்ந்து
கொண்டது ..கடன்கள் அதிகமானது மேலும் தந்தைக்கு வேறு உடல் சரியில்லாமல் போனது ..
என்ன செய்வதென்றே தெரியதிருந்தோம் ...
நாளுக்கு நாள் கடன் தொல்லை அதிகமநாதன் காரணத்தால் என் மகனை வேலைக்கு அனுப்பினேன்
இதனால் மிகவும் கவலை கொண்ட என்னுடைய கணவர் வெளியில் சென்று வருகிறேன்
என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றவர் சயன்காலமாகிஉம் வரவில்லை ..

அக்கம் பக்கத்தில் விசாரித்தேன் .தெரிந்த இடமெல்லாம் தேடினேன் ..எங்குமே !இல்லை ..
மனவேதனையுடன் திரும்பினேன் ...இரவு நேரம் வந்தது மணி 8 இருக்கும் கோசல்யா என்று
குரல் கேட்டது ..அது என் கணவர் குரல் ..கதவை திறந்தேன் ..கௌசல்யா எனக்கு வேலை கிடைத்து
விட்டது ...னது கஷ்டம் குறைந்து விடும் என்றார் ...

இந்த நிலையில் நீங்கள் வேலைக்கு செல்லவேண்டுமா? நான் சென்றதற்கே இப்படி சொல்கிறாய்..
என் மகன் பள்ளி படிப்பைவிட்டு செல்லும் போது நான் என்ன வேதனை கொண்டேன் தெரியுமா !
நாளை முதல் என்னுடைய மகன் பள்ளிக்கு செல்லுவான் .........

மறுநாள் விடிந்தது என் கணவர் எங்கள் மகனை கொண்டு பள்ளியில் சேர்த்துவிட்டு வேலைக்கு
சென்றார் ......அமைதியான முறையில் வாழ்கை நகர்ந்தது ......அந்த நிலை நீடிக்கவில்லை ....
கடலில் விழுந்தபின் நீந்தித்தான் ஆகவேண்டும் .........

சங்கடம் எங்களை விடாமல் துரத்தியது .......

என் கணவர் வேலை செய்த ஆலையில் எவனோ !பணத்தை அபகரித்து சென்றுவிட்டான் .
கம்பனி பணம் கொள்ளை போனது சம்பந்தமாக போலீஸ் விசாரணை நடந்தது ..மேலும்
பணம் கொள்ளை போனதன் காரணமாக அனைவரின் சம்பள பணமுன் பாதியாக குறைக்கப்பட்டது ...
வேதனையில் தத்தளித்த வேளையில் மற்றவரின் வெறுப்பும் எங்களை சூழ்ந்து கொண்டது .......

இந்த நிலையில் என்னுடைய பெற்றோரும் கவல்கிடமாக உள்ளனர் ..என் தந்தை மிகவும்
கவலைகிடமாக இருந்தார் ..இந்த வேதனையில் கண் உறங்கியவர் கண் திறக்கவே இல்லை
மறுநாள் காலை என் மகன் என் தந்தையிடம் பெசிகொண்டிருந்தன் அப்போது அவர் மூச்சு பேச்சு
இல்லாமல் இருந்தார் அருகில் சென்று பார்த்தேன் .........(தொடரும் )

எழுதியவர் : சு.முத்து ராஜ குமார் (23-Jul-15, 2:08 am)
பார்வை : 199

மேலே