இரத்ததின் மதம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு என் சொந்த ஊர் திருவாரூரில் இருந்த சமயம். அப்பொழுது புதிதாக அறிமுகம் ஆன நண்பர் ஒருவரிடம் இருந்து என் கைபேசிக்கு அழைப்பு வந்ததது.அவர் சற்று பதற்றமாகவே பேசினார் ஒரு மருத்துவனையின் பெயரை குறிப்பிட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு வர சொன்னார்.நானும் என் வண்டியில் விரைந்து சென்று அவரை சந்தித்தேன்.அவர் என்னிடம்
அவசரமாக ஒரு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற (o-)வகை இரத்தம் தேவை படுவதால் என்னை அழைத்ததாக கூறினார்.(இரத்த வங்கியில் இரத்ததானம் செய்ய என் பெயரை பதிவு செய்ய சென்ற சமயம் அந்த நண்பர் அறிமுகமும் கைபேசி எண்,இரத்த வகை பறிமாற்றமும் நடந்தது)உடனடியாக நான் சென்று இரத்ததானம் செய்யும் படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அங்குள்ள செவிழியரிடம் கொடுத்தேன்.அவர் என் உடல் எடையை சரிபார்த்து கொண்டு இரத்தம் எடுக்கும் அறைக்கு அழைத்து சென்று
இரத்தம் எடுத்துக்கொண்டனர். இரத்தம் எடுக்கும் சமயம் என் கையில் கொடுக்கப்பட்ட ரப்பர் பந்தை அழுத்தும் ஒவ்வொரு நொடியும் என் மனம் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தது அச்சிறுவனுக்காக. பின் அவ்வறையை விட்டு வெளியில் வந்து என் நண்பரை நோக்கிய பொழுது அவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார் அச்சிறுவனுக்காக.பின் என்னை நோக்கி சிறிய புன்னகை செய்து என் கைப்பிடித்து அழைத்து சென்று அறுவை சிகிச்சை நடைப்பெறும் அறைக்கு சற்று தொலைவில் நிறுத்தி அச்சிறுவனின் பெற்றோரையும் உறவிரையும் காண்பித்தார் அவர்களின் கண்கள் கண்ணீருடன் இறைவனை
தொழுதுக்கொண்டிருந்தது அச்சிறுனுக்காக.
இரத்தம் தேவைப்பட்ட சிறுவனின் பெற்றோரை கண்டு உணர்ந்தேன் அவர்கள் மதம் இஸ்லாம்.
அச்சிறுவனுக்கு எவ்வித சம்மதமும் இல்லாமல் அவனுக்காக வருந்தும் என் நண்பர் மதம் கிருத்துவம்.
அச்சிறுவனுக்கு இரத்தம் கொடுக்க வந்த நான் இந்து.
எங்கள் மூவரின் பிரார்த்தனையும் இறைவனை நோக்கியே அச்சிறுவனுக்காக...
இங்கு மனிதன் மதத்தினை சார்ந்து உள்ளான் என்றால்
மனித இரத்தம் எம்மதம்???