குழந்தைகள் தீவிரவாதப் படையா
சில நாட்களுக்கு முன் நான் பார்த்த மறக்க முடியாத ஒரு சிறுவன் முகம் என்னைக் கலவரப் படுத்தி விட்டது .அது சிரியாவின் ராணுவ அதிகாரியைப் பிடித்துச் சென்ற சிரியாவில் ராணுவ வீரரின் தலையை ஒரு சிறுவன் தலையை வெட்டும் வீடியோ, ஐ.எஸ். அமைப்பு மூலம் வெளியிட்டுள்ளது.இருக்கிறது ஆனால் நான் பார்த்தது மூன்று படங்கள் மட்டுமே இதுவே என்னை உலுக்கிவிட்டது .சில நாளாக இந்தப் படமும் அந்தச் சிறுவனின் முகமும் நினவில் முள்ளாய் மேலே வந்து வந்து வலிக்கச் செய்கிறது .அதோடு அந்த ராணுவ அதிகாரியின் வாயில் ஏதுவும் கட்டப்படாத நிலையில் மரணத்தைச் சந்திக்கத் தயாராகும் முகம் இரண்டும் மரணத்தையும் - வாழ்வையும் மிகச் சமீபத்தில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமாகக் காட்டுகிறது
உலக வன்முறைக்கு யாரெல்லாம் காரணம் எதுவெல்லாம் காரணம் என்ற பட்டியல் எல்லோருக்கும் தெரியும் அது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது .அதிகக் காரணமாக வளம் உள்ள நாடுகளைக் குறிவைத்து அவர்களின் பலவீனத்தைக் குறிவைத்து வன்முறை தீ பரவுகிறது .இருந்தாலும் கடந்த டிசம்பர் 16 ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் ஒன்றுமறியாத 132 குழந்தைகள் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட செய்தியை வன்முறையை வளர்த்த நாடுளே தவறு என்று கண்டித்தன .ஆனால் இப்போது குழந்தைத் தீவிரவாதிகளை உருவாக்குவது என்ற புதிய அவதாரம் எடுத்துச் செயல் புரியும் தீவிரவாத அமைப்புகளின் நோக்கத்தை எந்தக் குறிக்கோளாய்ச் சொல்வது குழந்தைகள் என்ன செய்தார்கள் இந்தப் பூமியில் பிறந்தது அவன் தவறா ? ஏற்கனவே நம் பூமியைக் காற்றை,புவிப்பாதையை,கடல் நீரை, மாசு படுத்த எல்லாத் திட்டங்களையும் வகுத்து விட்டோம் .வருங்காலத்தைத் தொலைக்க மனிதனால் மட்டுமே முடியும் என்று மற்ற மிருகங்களுக்குச் சவால் விட்டு வருகிறோம் .அந்தப் பட்டியலில் குழந்தைகள் தீவிரவாதம் படை ஒன்றா ?
என்ன செய்தார்கள் குழந்தைகள் ?
இவர்களை வன்முறையாளார்களாக மாற்றி விட்டால் உங்களின் சுதந்திரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை ஒரு மதமோ மனிதமோ ஒத்துக் கொள்ளுகிறதா ? அன்பை மட்டுமே போதிக்காத மதம் இந்தப் பூமியில் இருக்கிறது என்றால் நூறு மில்லியன் டாலர்ச் செலவில் வேற்று கிரகவாசிகளைத் தேடும் ரஷ்யக் கோடீஸ்வரர் யூரி மில்னர் திட்டத்தில் அவர்களெல்லாம் சேர்ந்து வேற்றுக் கிரகங்களுக்குச் சென்று குடியேறுவதே உத்தமம்.இதுக் குழந்தைகளை தெய்வமாகக் கொண்டாடும் உலகம் .பாவம் அவர்கள் கையில் ஆயுதங்களுக்கு வேலைத் தராதீர்கள் .உங்களால் முடிந்தால் அவர்களை விட்டுவிடுங்கள்.இதைத்தான் இந்த உலகம் உங்களை வேண்டிக் கொள்கிறது.